Tuesday, April 17, 2018

MINI LESSON


குறுநிலை கற்பித்தல்
MINI TEACHING

மாணவ ஆசிரியர் பெயர்            பா.முருகன்
வகுப்பு                                 7- ஆம் வகுப்பு
பாடம்                                   தமிழ்
தலைப்பு                               புறநானூறு
நாள்                                    29-10-2017
காலம்                                 20 மணித்துளிகள்

பொது நோக்கம் :
v எட்டுத்தொகை நூல்களை அறிந்து கொள்கிறான்
v எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானுற்றின் சிறப்புகளை புரிந்து கொள்கிறான்
v புறநானூற்று பாடலை சீர்பிரித்து குரல் ஏற்றத்தாழ்வுடன் வாசிக்கும் திறனை வளர்த்து கொள்கிறான்
v பாடலின் கருத்துக்களை புரிந்து கொள்கிறான்


சிறப்பு நோக்கம் :
v எட்டுத்தொகை நூல்களை பட்டியலிடுகிறான்
v புறநானூறு நூற்குறிப்பு , ஆசிரியர்குறிப்புகளை எடுத்து இயம்புகிறான்
v புறநானூறு பாடலின் கருத்துக்களை விளக்குகிறான்
v மனப்பாடம் செய்யும் திறனை வளர்த்து கொள்கிறான்
v வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறக்கருத்துகளை தெரிந்து கொள்கிறான்
துணைக்கருவிகள் :
Ø மின் அட்டை – அருஞ்சொற்பொருள்
Ø சுழல் அட்டை – இலக்கணகுறிப்பு , பிரித்து எழுதுக
Ø வரைபட அட்டை – ஆசிரியர் குறிப்பு , நூற்குறிப்பு
உள்ளடக்க வரைவு :
Ø எட்டுத்தொகை நூல்கள்
Ø புறநானூறு – நூற்குறிப்பு
Ø புறநானூறு பாடலின் விளக்கம்
Ø இலக்கணகுறிப்பு , அருஞ்சொற்பொருள்
Ø வாழ்கையோடு இணைத்து கற்பித்தல்
கற்பித்தல் திறன்கள் ;
v தொடங்குதல் திறன் :
                மாணவ ஆசிரியர் மாணவர்களின் முந்தைய அறிவினை சோதிக்கும் வகையில் பதிணென் கீழ்கணக்கு நூல்கள்  எத்தனை? எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை குறிப்பிடுக ? எட்டுத்தொகை நூல்களில் புறநூல்கள் எவை ? என பல வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டி பாடத்தை தொடங்குகிறார்.
v விளக்குதல் திறன் :
                        புறநானூற்றில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. புறநானூறு ஆசிரியர் குறிப்பு , நூல்குறிப்பு  பாடல் கருத்துக்கள், அருஞ்சொற்பொருள், இலக்கண குறிப்பு பகுபத உறுப்பிலக்கணம் போன்றவற்றை மாணவ ஆசிரியர் கற்பித்தல் துணைக்கருவிகள் மூலமாகவும், தகுந்த குரல் ஏற்றதாழ்வுடன் விளக்குகிறார்.
v வினாக்கேட்டல் திறன் :
                 பாடக்கருத்துக்களை கூறும்போது இடையிடையே புறநானூற்றை இயற்றியவர் யார்?, புறநானூறு எத்த்கைய நூல்களில் ஒன்று? பாடல் எண்ணிக்கை? “தானை” – என்பதன் பொருள்? கடனே பொருள் கூறுக? புறநானூறு பிரித்து எழுதுக? என பல வினாக்களை கேட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
v பல்வகை தூண்டல்களை பயன்படுத்தும் திறன்:
                          புறநானூறு நூற்குறிப்பு , ஆசிரியர் குறிப்பு போன்றவற்றை மின்னட்டை மூலமாகவும், அருஞ்சொற்பொருளை மாணவர்களை கரும்பலகைக்கு சென்று எழுத சொல்லியும், இலக்கணகுறிப்பு சுழல் அட்டை மூலமும், புறநானூறு பாடலை வரைபட அட்டை மூலமும், பாடலின் பொருளை மாணவர்கள் எழுந்து நின்று விடையளித்தும் ஆசிரியர் பல்வகைத்தூண்டலை நன்முறையில் பயன்படுத்துகிறார்.
v வலுவூட்டல் திறன் :
                      பாடம் விளக்கத்தின் இடையே கேட்கப்படும் வினாவிற்கு மாணவர்கள் விடையளிக்கும் போது நன்று,மிகநன்று,அருமை, சரியான பதில், வாழ்த்துக்கள், போன்ற மொழிசார் வலுவூட்டிகளையும் கரவொசை,தட்டிகொடுத்தல்,புன்னகைத்தல் போன்ற மொழிசார்பற்ற வலுவூட்டிகளையும் தகுந்த இடங்களில் வலுவூட்டல் திறன் பயன்படுத்துகிறார்.
v சரளமாக பேசும் திறன் :
              பாடம் தொடக்கம் முதல் இறுதிவரை பாடகருத்துக்களை வழங்கும் போது தகுந்த குரல் ஏற்றதாழ்வுடனும் பாடல் வரிகளை வாசிக்கும் போது தெளிவான உச்சரிப்புடன் அனைத்து மாணவர்களுக்கும் நன்கு கேட்கும்படி சரளமாக பேசுதல் திறன் இருந்தது.
v முடித்தல் திறன் :
                   புறநானூறு பாடல் விளக்கம், ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்றவற்றை தெளிவான முறையில் தொகுத்துகூறியும் அருஞ்சொற்பொருள், இலக்கணகுறிப்பு  போன்றவற்றை தகுந்த முறையில் விளக்கியும் கற்பித்தல் துணைக்கருவிகள் கொண்டு முடிக்கிறார்.
கற்பித்தல் முறைகளும் செயற்பாடுகளும் :
v ஊக்கப்படுத்துதல் :
                      பதிணென் கீழ்கணக்கு நூல்கள் மொத்தம் எத்தனை? சங்க இலக்கியங்கள் எவற்றை குறிப்பிடுகின்றோம்?  எட்டுத்தொகை நூல்களில் புறநூல் எது? புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன? இவ்வுலகத்தார்க்கு உயிராகா எது? என பல வினாக்ளை கேட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி புறநானூறு பாடலை அறிமுகம் செய்தார்.
v பாடக்கருத்துக்களை வழங்குதல் :
             புறநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. புறநானூற்றில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. புறநானூறு = புறம்+நான்கு+நூறு என பிரிக்கப்படுகிறது. இப்பாடலை இயற்றியவர் மோசிகீரனார். மோசி என்னும் ஊரில் பிறந்தார். கீரன் என்பது குடிபெயராக குறிப்பிடப்படுகிறது.
         இசையோடு கூடியது இப்பாடல். இவ்வுலகத்திற்கு அரசனே உயிர் என்பதனை  இப்பாடல் எடுத்துக்கூறுகிறது. இப்பாடலை படிக்கும் போது கருத்தாழமும், ஓசையின்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள செய்யும்.
v பொழிப்புரைத் திறன் :
         நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே
          மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
          அதனால் யான் உயிர் என்பது அறிகை
          வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே ………….”
பொருள் :
இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறைசெய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.
அருஞ்சொற்பொருள் :
தானை – படை    கடனே – கடமை
பிரித்து எழுதுக :
புறநானூறு = புறம்+நான்கு+நூறு
v இடைவினை :
                 புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன? 400 பாடல்கள் என்று மாணவர்கள் பதில் கூறுதல். ஆசிரியர் நன்று என பாராட்டுதல். புறநானூற்று பாடலின் ஆசிரியர் யார்? அவர் வாழ்ந்த ஊர்? மோசிகீரனார் , மோசி என்று மாணவர்கள் பதில் கூறுகின்றனர். ஆசிரியர் கரவொசை எழுப்பி பாராட்டுகிறார்.
v மீளச்சிந்தித்தல் :
             புறநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. புறநானுற்றில் மொத்தம் நானூறு பாடல்கள் உள்ளன. இப்பாடலை இயற்றியவர் மோசிகீரானார். இப்பாடல் மன்னரின் போர் வாழ்ககையை எடுத்து கூறுகிறது. மணி புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன? மாணவர் 400 என்று பதில் கூறுதல். நன்று என பாராட்டி ஆசிரியர் ஊக்குவித்தல். முத்துப்பாண்டி புறநானூறு இவற்றை கரும்பலகைக்கு சென்று பிரித்துஎழுது? மாணவர் பிரித்து எழுதுதல். ஆசிரியர் புன்னகைத்தல், கரவொசை எழுப்பி பாராட்டுகிறார்.
v தொகுத்துக் கூறுதல் :
                 எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. இது புறப்பொருள் பற்றியது. புறநானூற்றில் 400 பாடல்கள் உள்ளன. இந்நூல் வீரம், கொடை, ஆட்சிசிறப்பு போன்றவற்றை எடுத்து கூறுகின்றது. இவ்வுலகத்திற்க்கு அரசனே உயிர் என்பதை இப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஆசிரியர் கற்பித்தல் துணைக்கருவிகள் கொண்டு தொகுத்துக்கூறி முடிக்கிறார்.
குறுநிலை கற்பித்தல் உற்றுநோக்கி பின்னூட்டம் வழங்கும் படிவம் :
மாணவ ஆசிரிய பெயர்    பா.முருகன்          
காலம்                    20 மணித்துளிகள்
மதிப்பிடுதல்              சராசரி:1, நன்று:2, மிகநன்று:3
 கற்பித்தல்திறன்கள்
 
  சராசரி

 நன்று
  
   மிக
  நன்று

மொத்தம்
தொடங்குதல்திறன் 




விளக்குதல்திறன்




பொழிப்புரைத்திறன்




வினாக்கேட்டல்திறன்




பல்வகைத்தூண்டல்
பயன்படுத்தும் திறன்




வலுவூட்டல்திறன்




சரளமாகபேசும்திறன்




முடித்தல்திறன்




மொத்தம்




மதிப்பெண் வீச்சு         :    8-24
மதிப்பெண்களை நுணுகுதல்:
சராசரி                    :    8  
நன்று                     :    9-16
மிக நன்று                :    17-24
                          உற்றுநோக்குபவர் கையொப்பம்
குறுநிலைக்கற்பித்தலை பயிற்சியின் கற்பித்தல் படிநிலைகளை ஒருங்கிணைத்தல் படிவம் :
மதிப்பிடுதல்      :       சராசரி:1, நன்று:2, மிகநன்று:3
கற்பித்தல் படிநிலைகள்
சராசரி
 நன்று
மிகநன்று
மொத்தம்
ஊக்கப்படுத்துதல்




பாடக்கருத்துக்களை வழங்குதல்




இடைவினை




மீளச்சிந்திதல்




தொகுத்துக்கூறல்




மொத்தம்




மதிப்பெண் வீச்சு :            5 -15
மதிப்பெண்களை நுணுகுதல் :
சராசரி                    : 5
நன்று                     : 6 -10
மிக நன்று                : 11 -15

                     உற்றுநோக்குபவர் கையொப்பம்


                     








 

1 comment:

  1. The Emperor Casino: $10 No Deposit Bonus Code For $20
    Get your $20 no deposit bonus code! Now you can claim one of the top online casinos with 인카지노 the 메리트 카지노 고객센터 highest 제왕카지노 paying welcome bonuses and welcome bonuses.

    ReplyDelete